இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை வரவுள்ளார்.
சிசெல்ஸ், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளார்.
புதுடில்லியிலிருந்து சிசெல்ஸ் தலைநகர் விக்டோரியாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் சென்றடைந்துள்ளார். அங்கு அரச சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நேற்று புதன்கிழமை இரவு மொரிஷியஸூக்கு அவர் சென்றுள்ளார். இன்று, இந்தியாவுக்கும் மொரிஷியஸூக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்த விஜயங்களை முடித்துக் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காலை 09.00 மணியிலிருந்து முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நாளை பிற்பகலில் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதிக்கான விஜயத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடவுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கையின் வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் செல்லும் இந்தியப் பிரதமர் அங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். கீரிமலையில் இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளிப்பது, கலாசார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவது, தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பது உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தன்னுடைய விஜயத்தினை முடித்துக் கொண்டு நாளை மறுதினம் மாலையில் புதுடில்லி செல்லவுள்ளார்.

0 Responses to மோடியின் இலங்கை விஜயம்: நாளை பாராளுமன்றத்தில் உரை; நாளை மறுதினம் யாழ் செல்கிறார்!