இன்று இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணம் புறப்பட்டு உள்ளார்.
இன்று காலை அரசு அலுவல்கள் மற்றும் கடமைகளை முடித்த மோடி, 2015ம் ஆண்டின் முதன் முறை வெளிநாட்டுப் பயணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று அவர் பார்வையிடுவார் என்றும், அதோடு அவர்களுக்கான நலத்திட்டங்கள் எந்த அளவில் அவர்களை சென்றடைகின்றன என்றும் ஆய்வு மேற்கொள்வார் என்று தெரிய வருகிறது.
மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ள பிரதமர், நாளை இரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தில் விருந்து உண்ண உள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவை அவர் சந்திக்க மாட்டார் என்றும், தற்போதைய அதிபரை சந்திக்கையில் தமிழக மீனவர்கள் குறித்தப் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் தீர்வு காண்பார் என்றும் சொல்லப்படுகிறது.

0 Responses to இன்று இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம்!