Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் பரவாமல் இருந்த பன்றிக்காய்ச்சல், சேலத்தில் ஒரு பெண்ணைப் பலிகொண்டதோடு, அவரது பெண்ணையும் தொற்றியுள்ளது.

 நாடு முழுவதும் குறிப்பாக குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களை வாட்டி வதைத்த பன்றிக் காய்ச்சல், தமிழகத்திலும் ஓரிரு இடங்களில், ஒரு சிலருக்கு தோன்றி அவர்களை வாட்டி வதைத்து வருகிறது. சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இப்படி சேலத்தில் கடந்த வாரம் ஒரு பெண்மணி பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இப்போது இவரது வளரிளம் பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு,இவர் சேலம் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல்நிலை தேறி வருகிறது என்றும், யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றும் அம்மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

0 Responses to சேலத்தில் தாயைப் பலிக்கொண்ட பன்றிக்காய்ச்சல் பெண்ணைத் தொற்றியது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com