Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனும், கடற்படையின் லெப்ரினன் தரநிலை வீரருமான யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் குற்றவியல் பிரிவில் இன்று புதன்கிழமை காலை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொலிஸ் ஏற்கனவே விடுத்த அழைப்பையேற்று யோசித்த ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் குற்றவியல் பிரிவிக்கு சென்ற போது, அவரின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தார்.

வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியில் வந்த யோசித்த ராஜபக்ஷவை ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு, சகோதரரின் சார்பில் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

அதில், “யோசித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். நாம் குற்றமற்றவர்கள். அதனாலேயே, பொலிஸ் அழைப்பு கிடைத்தவுடன் வந்தோம்.” என்றுள்ளார்.

0 Responses to யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் குற்றவியல் பிரிவில் வாக்குமூலம் அளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com