Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோத்தபாய வெளிநாடு செல்லத்தடை!

பதிந்தவர்: தம்பியன் 09 March 2015

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு அறிவிப்பு இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

காலி பிரதான நீதவான் நிலுபீலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகியோருக்கும் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கோத்தபாய வெளிநாடு செல்லத்தடை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com