Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக கடமையாற்றிய முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர்கள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்றதன் பின்னர் சட்ட விரோதமாக 10 இராணுவ உறுப்பினர்களை தங்களது பாதுகாப்பிற்காக சரத் பொன்சேகாவும், சேனக்க ஹிரிப்பிரிய டி சில்வாவும் வைத்திருந்ததாகவும், அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் இந்த வழக்கில் குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கிலுள்ள குற்றச்சாட்டுக்கள் அரச தரப்பினால் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் அறிவித்துள்ளார்.

0 Responses to மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றிலிருந்து சரத் பொன்சேகா விடுதலை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com