Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டினால் சுட்டுத்தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த ஆவணப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய மீனவர் பிரச்சனை மிகவும் முக்கியமான ஒன்று. இருநாட்டு அரசுகளும் ஏற்கனவே பலமுறை இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இது ஒரு மனிதாபிமான பிரச்சனை. இப்போதும் நீடித்து வரும் பிரச்சனையாக உள்ளது.

தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடனும் இன்றே இதுகுறித்து பேசுவார்.

கடல் எல்லைப் பிரச்சனையில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்படத் தக்க வகையில் ஓர் இணக்கமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 Responses to தமிழக மீனவர் பிரச்சனை; ரணில் விக்கிரமசிங்கேவுடன் சுஷ்மா சுவராஜ் பேசுவார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com