Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 2014ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றய தினம் விபூசிகா தங்க வைக்கப்பட்டுள்ள ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கு தனது தாயாரை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் விபூசிகா.

தாயைத் தந்தையை உடன் பிறந்த சகோதரர்களை இழந்து தனிமையில் வாடும் சிறுமி விபூசிகா தனது பூப்புனித நீராட்டு விழாவிற்காவது தனது தாயாா் பிணையில் விடுவிக்கப்படுவாா் என காத்திருந்த நிலையில் மிகுந்த ஏமாற்றத்துடன் நேற்றைய தினம் தனது பூப்புனித நீராட்டு விழாவில் சோகமே நிறைந்ததாக காணப்பட்டாள்.

காணாமல் போன தனது அண்ணா எங்கே என குரலெழுப்பிய சிறுமி ஆச்சிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அதே வேளை தனது மகன் எங்கே என கேட்ட தாய் தடுப்பு முகாமில் வதைக்கப்படுவதாக உறவினா்கள் கவலை வெளியிட்டுள்ளனா்.

0 Responses to விபூசிகாவுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com