Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் மகள் என்கிற தாம் எடுத்துள்ள ஆவணப் படத்தை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி பார்க்க வேண்டும் என்று, பிரிட்டன் BBC தொலைக்காட்சிக்கு படத்தை எடுத்துக் கொடுத்த இயக்குனர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி நிர்பயா என்று ஊடகங்களால் பெயர் வைக்கப்பட்ட, பிசியோதெரபி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரை பாலியல்பலாத்காரம் செய்தது ஓடும் பேரூந்தில் 6 பேர் அடங்கிய கும்பல். இவர்களில் ஒருவன் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் ஒருவன் சிறார் குற்றவாளி.

இந்நிலையில்தான் பிரிட்டனை சேர்ந்த இயக்குனர் ஒருவர் இந்த சம்பவத்தை ஆவணப் படமாக எடுத்து இந்தியா தவிர அனைத்து நாடுகளுக்கும் ஒளிபரப்பும் உரிமையை BBC தொலைக்காட்சி மூலம் அளித்துள்ளார். இந்தியாவில் இதற்கு எதிர்ப்பும்,தடையும் இருந்த நிலையிலும் இந்த படத்தை வெளியிட்டதற்கு BBC தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இந்திய அரசு வழக்குப் பதிவு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் தமது ஆவணப் படத்தை மோடி பார்க்க வேண்டும் என்றும், படத்தைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரவியுள்ளன என்றும் கூறியுள்ள அந்த படத்தின் இயக்குனர், படத்தில் பல வரவேற்கத் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதால் மோடி கட்டாயம் பார்த்து தமது கருத்தை வெளிப்படையாக அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to இந்தியாவின் மகள் ஆவணப் படத்தை மோடி பார்க்க வேண்டும்: இயக்குனர்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com