Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் முகமாக கொண்டு வரப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டத்தில் இன்னும் சில புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் மறுசீரமைப்பு பூர்த்தி அடைந்த பின்னரே 19வது திருத்தம் அமுலாகும் என்றும் புதிய திருத்தங்களின் அடிப்படையில் 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், எதிர்வரும் வாரம் 2/3 பெரும்பான்மையுடன் 19வது திருத்தச் சட்டத்தை பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் என்றும், தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தையும் விரைவாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும், பொதுத் தேர்தலை அவசரமாக நடத்துவதை, விட 100 நாள் திட்டத்திலுள்ள வாக்குறுதிகளை அமுல்படுத்துவதே அவசரமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to 19வது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்தங்கள்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com