இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் மற்றும் அவ்வாறான விடயங்களை பிரசுரிக்கும் நபர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
இதற்கேற்ப, குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்குள் இது குறித்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகரித்ததாக குறிப்பிட்ட அவர், இன மற்றும் மதம் சார்ந்த குரோத கருத்துக்களால் இனங்களிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தடுப்பதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இன, மத விரிசலை ஏற்படுத்த உதவும் வகையில் கருத்து வெளியிடுவது இதனூடாக தடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இன- மத வாதத்தைத் தூண்டினால் 2 வருடச் சிறை; குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம்!