Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அடையாளத்தை தக்க வைப்பதற்காக சில விடயங்களில் குரல் எழுப்பினாலும், புதிய அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தை குறிப்பாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே தேசிய ரீதியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணியான தேசிய ஒருமைப்பாட்டு நிலையத்திற்கு தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கூட்டமைப்புக்கும் புதிய அரசுக்கும் இடையில் நெருக்கமான உறவு: சந்திரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com