நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றி பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் 19வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதாக?, என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதிக்கு அப்படியேதும் பிரச்சினைகள் இல்லையென்றால், 19வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய தொடர்பில் அவர் ஏன் மௌனம் சாதிக்கின்றார் என்றும் அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பசும் போதே அந்தக் கட்சியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அநுரகுமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்கள் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்போவதில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை எதனையும் எடுக்காது அமைதியாக இருந்து வருகின்றார்.
ஜனாதிபதியின் இந்த அமைதியான நிலைப்பாடு தொடர்பில் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி தெளிவான உரையை ஆற்றவேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் கூறியே பல பேர் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், ஜனநாயகத்தை மீறியே செயற்பட்டுள்ளனர்.
தேர்தல் காலங்களில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளதுபோல் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். தேர்தலைப் பிற்போடுவதில் ஜனாதிபதிக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டுள்ளதா? எமது கேள்விகளுக்கு பாராளுமன்றில் தெளிவான பதில்களை ஜனாதிபதி வழங்கவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றுவதில் மைத்திரிக்கு பிரச்சினையா? - ஜே.வி.பி கேள்வி!