Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு 2000 மில்லியன் (200 கோடி) ரூபாவினை இலஞ்சமாக தர முயன்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கம்பளை நகர சபையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தகவலுக்கு மேல் தகவல் வந்து கொண்டிருந்தது. 200 கோடி ரூபா பணம் தருகின்றேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகின்றேன், ஜெனரல் அதிகாரத்தை மீண்டும் தருகின்றேன், பாதுகாப்பு வழங்குகின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதைச் செய்து தருகிறேன் எனத் தகவல் வந்துகொண்டே இருந்தது. ஆனால், அதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை.

நாட்டைப் பற்றியே சிந்தித்த காரணத்தால் நாங்கள் எவரிடமும் மண்டியிடவில்லை. சிறையில் இருந்தாலும் மண்டியிடவில்லை. ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ மண்டியிட்டுள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த 200 கோடி ரூபாவை இலஞ்சமாக தர முயன்றார்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com