Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் சுமார் 3000 பேர் அங்கவீனமுற்றுள்ளதாகவும், இவர்களில் 900 பேர் முழுமையாக அங்கவீனமுற்றுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

மோதல்களின் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் சரணடைந்த மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட சுமார் 12000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் 47பேர் மாத்திரமே வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வுக்காக எஞ்சியுள்ள 47 பேரும், இவ்வருடத்துக்குள் புனர்வாழ்வை பூர்த்தியாக்கிக்கொள்வர் என்று தெரிவித்த அவர், முன்னாள் போராளிகளை அடிக்கடி புனர்வாழ்வுக்காக இந்நிலையங்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைப்பதாலேயே புனர்வாழ்வு நடவடிக்கை முற்றுப்பெறாமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அங்கவீனமுற்ற நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கத்தினால் மாதா மாதம் சிறு கொடுப்பனவொன்று வழங்கப்பட்டு வருவதாகவும், இவர்கள் தற்போது தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அவரவர் வீடுகளில் வசித்து வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 3000 பேர் அங்கவீனமுற்றுள்ளனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com