Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு அவுஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

இதனை அடுத்து இந்தோனேசிய அவுஸ்திரேலிய தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது முதன்முறையாக இந்தோனேசியாவுக்கான தனது தூதரை கலந்தாலோசனைக்காக அவுஸ்திரேலியா மீளப் பெற்றுள்ளது.

மேலும் பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட் என்பவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதால் பிரேசிலும் இந்தோனேசியாவுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் கூறுகையில் அண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருமே ஒரு தசாப்த காலமாக சிறையில் இருந்த போது முற்றாகத் திருந்தி விட்டதாகவும் இவர்களுக்கு இக்குரூர தண்டனை அளிக்கப் பட்டிருப்பது நிச்சயம் தேவையற்ற ஒன்று எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறுகையில் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைக்குப் பதிலாக கான்பெர்ராவில் இருந்து எமது தூதரைத் திரும்பப் பெறும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் ஏனெனில் இது அரசியல் விவகாரம் அல்ல. சட்ட ரீதியான புரிந்துணர்வு தொடர்பான விவகாரம் என்று தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஒவ்வொரு நாளும் 33 பேர் வரை மரணமடைவதாக அந்நாட்டின் தேசிய போதைப் பொருள் முகாமை அமைப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசிய அவுஸ்திரேலிய தூதரக உறவில் விரிசல்!:மரண தண்டனையின் எதிரொலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com