Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது.

அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட இதர நாடுகளை சேர்ந்த 8 பேரை துப்பாக்கியால் சுட்டு இந்தோனேஷிய அரசாங்கம் துஷாக்காம்பாங்கான் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனையை நிறைவேற்றியது.

அதேவேளை தனது நாட்டு பிரஜையான ரொட்ரிகோ குல்ஹரேட் என்பருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிரேசில் அரசாங்கம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

மேரி ஜேன் பிஸ்டா வெல்ஹேசோ என்ற பெண் சார்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இறுதி கோரிக்கையை விடுத்ததை அடுத்து அந்த பெண்ணின் தண்டனையை இந்தோனேசிய அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.

இந்த பெண் குற்றமற்றவர் எனவும் அவரை தாம் கருவியாக பயன்படுத்தியதாக கூறி பிலிப்பைன்ஸ் நபர் ஒருவர் சரணடைந்துள்ளார். இதன் காரணமாகவே அந்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றுவது ஒத்தவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு போதைப் பொருளை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் பாலி 9 வலய தலைவர்கள் என அழைக்கப்படும் குழுவை சேர்ந்த அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

0 Responses to அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com