Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி ‘நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தலைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எட்டு இளைஞர்களில் இருவர் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு தொடர்பில் வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறும், அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால், அந்நீரை பொதுமக்கள் பருக முடியுமா என்பதை வடக்கு மாகாண சபை தெளிவுபடுத்தவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இதனிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடியபோதிலும், உறுதியான தீர்வு வரும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் கைவிடமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to யாழ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவர் மயக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com