Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக 37 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று நடந்த பதவியேறு நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பகவத் கீதையை சாட்சியாக வைத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப்பதவியை பெறும் மிக இளவயது நபர் விவேக் மூர்த்தி ஆவார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பம் அவர்களுடையது. தமது தாத்தா மனம் வைத்திருக்காவிட்டால் தாங்கள் அங்கேயே விவசாயிகளாக இருந்திருப்போம் என்று பதவியேறு நிகழ்வின் போது அவர் கூறினார். ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் படித்த டாக்டர் விவேக், தமது மருத்துவப் பட்டத்தை யேல் பல்கலைக் கழகத்தில் பெற்றார். பாஸ்டன் பிரிஹாம் மற்றும் பெண்கள் மருத்துவனை, ஹாவார்ட் மருத்துவப் பள்ளி ஆகியவற்றில் ஆசிரியராக கடமை புரிந்து வந்த விவேக் மூர்த்தி தற்போது அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பதவியேற்றுக் கொண்டதன் மூலம், மருத்துவத் துறையில் நிலவும் தற்போதைய சிக்கல்களை தணிக்கப் பாடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to அமெரிக்க மருத்துவத் துறையின் முதல் இளம் தலைவராக இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com