Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று சனிக்கிழமை நியூடெல்லியில் நடைபெற்ற தேசிய புலனாய்வு அகடாமியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமாக கார் வாகனப் பந்தோபஸ்து இன்றி எளிமையாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.

ஊடகக் கவனம் பெற்றுள்ள இந்த நிகழ்வுக்குக் காரணம் என்னவெனில் குறித்த நிகழ்வில் பங்கு பெறுவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காரில் சென்றால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பது கூறப்பட்டுள்ளது.

தவுலா குவான் பகுதியில் இருந்து துவாராக வரை இவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகளுடனும் தனது மெய்ப் பாது காவலர்களுடனும் இணைந்து சுமார் 12 நிமிடங்களுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்தார். மேலும் இப்பயணம் மிக மகிழ்ச்சிகரமாக இருந்தது என டுவிட்டரில் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். தனக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் ஏற்பட்டது டெல்லி மெட்ரோ ரயில் தலைவராக இருந்தவரும் மெட்ரோ மேன் என அழைக்கப் படுபவருமான சிறிதரன் மெட்ரோ ரயிலில் தனது பயண அனுபவம் பற்றி அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொண்டது தான் எனவும் மோடி டுவிட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to டெல்லி மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பயணித்தார் பிரதமர் மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com