மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க மீது ஆயுதக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவரது இராஜதந்திர கடவுச்சீட்டு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவினால் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யுக்ரேனில் உள்ள இந்திய தூதரக காரியாலயத்தின் இரண்டாவது தரப்பினரால், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இலங்கை அரசாங்கத்தினால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாகிஸ்தானிலிருந்து திரும்பியதன் பின்னர் எடுக்கப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்க தற்போது எங்கு இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் தேவையேற்பட்டால், சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியும் பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர். ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள், ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவரின் கொலை செய்யப்பட்டமை, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு மைத்துனரான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமதுங்க ஊழல் மோசடிக் குற்றங்களுக்கான விரைவில் கைதாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to மஹிந்தவின் மற்றொரு மைத்துனருக்கு எதிராக ஆயுதக் கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகள்!