Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம்’ என்று தொனிப்பட தேசிய அரசாங்கம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

“அப்பி பைஹினவா (நாங்கள் இறங்குகின்றோம்)” என்ற இரண்டு வார்த்தைகளினூடே தன்னுடைய ஆதங்கத்தை மைத்திரிபால சிறிசேன கடந்த தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும், எவரும் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. இது புதிய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகவே கருதப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்ட பின்னர் ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், எவ்வாறு அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்ல முடியும் என்று அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனினும் இதற்கான உரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் செயற்பட்டு வந்தது. எனினும், நல்லாட்சி என்ற தமது அரசாங்கத்தின் கீழ் அவ்வாறு செயற்பட முடியாது. எனவேதான் விமர்சனங்கள் எழுகின்றன என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அனுரகுமார திஸாநாயக்க, ஏப்ரல் 21ம் திகதி வரை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கும். இந்தக்காலக்கட்டத்தில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாம் தேசிய நிறைவேற்றுசபையில் இருந்து விலகுவோம் என்றுள்ளார்.

0 Responses to நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம்: மைத்திரி ஆதங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com