Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டாலும், 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அது நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் சாதகமானதொரு அறிகுறியாக இருந்த போதும், ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இல்லாதொழித்தல், ஜனாதிபதி வேட்பாளரின் ஆகக் குறைந்த வயது எல்லையை 32லிருந்து 35ஆக அதிகரித்துள்ளமை போன்றவையே இந்த திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளமை என்ன காரணத்திற்காக என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராமயில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதி வேட்பாளரின் வயதெல்லையை 32ஆக குறிப்பிட்டமை ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதற்கு வாய்ப்பாகவே என குறிப்பிட்ட கூட்டிக்காட்டிய அவர், இப்போது ரணில் விக்ரமசிங்க யாருக்காக வயதெல்லையை அதிகரித்துள்ளார் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுபுக்கூற வேண்டும் என்ற திருத்தம் சாதகமான அறிகுறி. அதுபோல, சுயாதீன ஆணைக்குழு பாராளுமனத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதும் சிறந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com