Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வராக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் 28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற திமுக உறுப்பினர்களுடன் வருகை தந்துள்ளார்.

தமிழக வரலாற்றில் மிக மிக நாகரீகமான முறையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அதிமுக-திமுக ஆகிய இருக்கட்சிக்ளும் தமிழக ஆட்சியை எதிர்க்கொள்ளத் துவங்கி உள்ளன. இதற்கு அதிக இடங்களில் வெற்றிப்பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக நடந்துக்கொள்ளும் முறையும், இக்கட்சிக்கு மரியாதை அளித்து அதற்கேற்ப தமது பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதும் சாட்சி.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், வெங்கைய நாயுடு, பாஜக கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளீதர் ராவ் உள்ளிட்டவர்களும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு, தேர்தலில் தோல்வியடைந்த சரத் குமார் உள்ளிட்டவர்களும் இவ்விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.12.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

0 Responses to 28 அமைச்சர்களுடன் பதவி ஏற்கிறார் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com