நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து முதலமைச்சரிடம் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்தார். அவர் அரச மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார்.

0 Responses to ஐ.நா. சிறப்புத் தூதுவர் யாழ் விஜயம்; முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினார்!