Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் ஒரு நாளைக்குக் குறைந்தது 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அண்மைய ஆய்வொன்றின் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கும் நிலையில் அண்மையில் இதனைத் தடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலாகியுள்ளது.

பல்வேறு காரணிகளால் தமது தொழில் பாதிக்கப் படுவதே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள ஏதுவாகின்றது.

இந்நிலையில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் நாட்டில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுத்து நிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்திய அரசு வழிகாட்ட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கப் பட்டுள்ளது. விரைவில் இந்த பொதுநல மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் எனத் தெரிய வருகின்றது.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகவும் அதிகபட்சமாக 2004 ஆம் ஆண்டு 18 241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டு இத்தொகை முன்னைய ஆண்டை விட 26% வீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துமாறு பொதுநல மனு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com