Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தில் அந்நாட்டு புராதன சின்னங்கள் அழிவு கவலை அளிக்கிறது என்று, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் சனிக்கிழமை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு, நேபாள நாடே நிலைக் குலைந்துக் கிடக்கிறது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ எட்டியுள்ளது. மீட்புப் பணிகளுக்கு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இந்தியாவில் இருந்து குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் இந்திய வட மாநிலங்களிலும் ஏற்பட்டு இங்கும் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் உருக்குலைந்துக் கிடக்கும் நேபாளத்தின் பழம்பெரும் கோயில்கள், புராதன சின்னங்கள் சீரழிந்துள்ளன. அப்பாவி மக்களைப் பலிகொண்டு புழுதிக் காடாக இருக்கிறது நேபாளம் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 Responses to நேபாளத்தில் புராதன சின்னங்கள் அழிவு கவலை அளிக்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com