Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு,, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, ஆந்திர அதிரடிப் படையினர் தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது,முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்புக் கேட்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரது முன் வைக்க உள்ளார் விஜயகாந்த்.

இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டிக் கொண்டு அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதையடுத்து நேற்று திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் அவர்.நாளை 12.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தம்மை சந்திக்க விஜயகாந்துக்கு, நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளார் என்றும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com