Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நிரந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை அங்கத்தவர்களாக கொண்டதாக அரசியலமைப்பு சபை அமைந்திருக்கும்.

இதில், 7 மக்கள் பிரதிநிதிகளும், 3 சிவில் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று 19வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் ஆட்சி மாற்றம் வரையில் நிரந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், ஆளுங்கட்சியின் சார்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷஷவும், எதிர்க்கட்சியின் சார்பில் ஜோன் செனவிரத்னவும், சிறிய கட்சிகளின் சார்பில் இரா.சம்பந்தனும், சிவில் அமைப்புகளின் சார்பில் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் மாயாதுன்ன, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவிச் செயலாளர் ராதிகா குமாரசுவாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடத்துக்கு முஸ்லிம் பிரதிநிதியயாருவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

இதனிடையே, அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்; முதலாவது அமர்வு எதிர்வரும் 09ஆம் திகதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com