ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் விரைவில் பதவி விலகுவார்கள் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அடங்குகின்றனர். இவர்களில் முதலில் ஐந்து அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வார்கள். தொடர்ந்து ஏனைய ஐந்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரி ஆதரவுக் கூட்டம் ஒன்றை அனுராதபுரத்தில் நடத்த மஹிந்த ஆதரவாளர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆதரவுக் கூட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதேசமயம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து ஜுன் 12 ஆம் திகதி மாத்தறையில் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தலைமையில் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 70 பாராளுமன்ற உறுப்பினர்களும், 5 அமைச்சர்களும் கலந்து கொள்வர்கள் என்று தெரிகிறது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த டிலான் பெரேரா, சி.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பவித்திரா வன்னியாராய்ச்சி ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மைத்திரி அரசிலிருந்து சுதந்திரக் கட்சியின் 10 அமைச்சர்கள் பதவி விலகலாம்?