Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை எதிர்வரும் 13ஆம் திகதி கூடி மீண்டும் ஆராயவுள்ளது.

சட்டவரைஞர் திணைக்களத்தால் தற்போது தொகுக்கப்படும் குறித்த சட்டமூலத்தினை கடந்த புதன்கிழமையும் அமைச்சரவை ஆராய்ந்தது. அத்தோடு, குறித்த சட்டமூலத்தினை கவனமாக ஆராயுமாறும், அடுத்த கூட்டத்துக்கு முன்னர் அரசியற்கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் ஜனாதிபதி ஆலோசனையும் வழங்கியிருந்தார்.

255 பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி இந்த திருத்தத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய கலப்பு முறையில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். சிறுபான்மை அரசியற்கட்சிகளுக்கும் இந்த முறைகளூடாக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. மீதியான 59 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான தமக்கு யோசனைகள் கிடைத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சாமான்ய மக்களும், தொழிற்சங்கவாதிகளும் யோசனைகளைத் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மீண்டும் ஆராய்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com