வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டிருந்தார்.
சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “வடக்கு மாகாண மக்களுக்கு அரசியல் ரீதியான நன்மைகளும், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எமது சந்திப்பு மிகவும் பயனுடையதாக இருந்தது, இருதரப்பு பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் பரிமாற இருந்த போதும் 25 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததால், அதிகமான விடயங்கள் குறித்து பேசமுடியாமல் போய்விட்டது.

0 Responses to வடக்கு மக்களுக்கு விரைவில் தீர்வு: ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!