Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசைக் கண்டித்து தென்னிந்திய மீனவர் பேரவை நிறுவனர் ஜெய பாலையன் தலைமையில் சென்னையில் இன்று மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று, மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது சுஷ்மா சுவராஜ் இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்தக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிய வருகிறது. தமிழக
மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தக் கூடாது, எல்லைத் தாண்டி மீன் பிடிக்க செல்லக் கூடாது என்றெல்லாம் கூறியதாகத் தெரிய வருகிறது.

மேலும், தமிழக மீனவர்கள் போதைப் பொருட்களைக் கடத்துவதாலும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள் என்கிற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துக்கு மத்திய அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது, தமிழக மீனவர்களைக் கொச்சைப் படுத்துவது போல இருக்கிறது என்று கூறிய ஜெயபாலையன், எனவே மத்திய அரசைக் கண்டித்து இந்த மாபெரும்
போராட்டத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்கார வேலர் மாளிகை முன்பு நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்களுக்கு எதிரான மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் முன் வைத்தனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தென்னிந்திய மீனவர் பேரவை சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com