Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் முறைமாற்றத்தின் போது சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

15 முக்கிய அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20வது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளடங்கிய புதிய யோசனைகள் ஜனாதிபதி, பிரதமர், சிறுபான்மை கட்சிகள் அடங்கிய விசேட குழுவினால் ஆராயப்பட்டு அடுத்த அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “20வது திருத்தச் சட்டத்தில் உள்ள 15 அம்சங்களில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை 255 ஆக உயரும். இது தொடர்பில் எந்த கட்சியும் ஆட்சேபனை முன்வைக்கவில்லை. தொகுதிவாரி முறை மற்றும் பல்தொகுதி முறையின் கீழ் 165 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு எஞ்சிய 90 பேரும் மாவட்ட விகிதாசார முறை மற்றும் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை குறைக்கப்படும். மாவட்ட விகிதாசார முறை மூலம் தெரிவாகும் தொகையில் எஞ்சிய தொகை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகும்.

இரு வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்துமாறும் புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும், பெண் உறுப்பினர்களுக்கு 5 முதல் 10 வீத இட ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட விகிதாசார முறையின் கீழ் 1/3 பெண்களை உள்வாங்கவும், தேசிய பட்டியல் வழங்குகையில் கூடுதல் அதிகாரம் வழங்கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

20வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்கு முன்னர் தகவலறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பனவும் நிறைவேற்றப்படும். ஜனாதிபதி, பிரதமர் சிறுபான்மை கட்சிகள் 20வது திருத்தம் குறித்து ஆர்வமுள்ள அமைச்சர்களடங்கிய விசேட குழு 15 அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to சிறு கட்சிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பா.உ.களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com