முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக முதற்கட்டமாக 43 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் கடற்றொழில் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்ற காலத்தில் அவர்களுக்கு தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதேபோன்று அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு தொழில் பயிற்சி வழஙகப்படும்.
இந்தக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கல் இன்னமும் இரு மாத காலத்தில் ஆரம்பமாகும். வாழ்வாதார உதவி வழங்கும் திட்டத்ததுக்கு மேலும் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியைப் பெற வெளிநாடுகளின் தூதரகங்கள், புலம்பெயர்ந்தவர்கள், அரசாங்கத்தின் உதவிகளை நாடியிருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னாள் போராளிகளின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக 43 மில்லியன் ரூபாய் ஒடுக்கீடு!