Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் மேரிலேண்டில் போலிஸ் கஸ்டடியில் பலியான ஃப்ரெட்டியே க்ராய் என்ற கருப்பின இளைஞர் விவகாரத்தில் நீதி வேண்டி பால்ட்டிமோரில் நடைபெற்று வந்த மோசமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இன்று சனிக்கிழமை இடை நிறுத்தப் பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக கருப்பின இளைஞரை விசாரணை என்ற பேரில் சித்திரவதை செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று கருதப்படும் 6 போலிசார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என நேற்று வெள்ளிக்கிழமை பால்ட்டிமோர் நீதித் துறை அறிவித்திருந்தது கூறப்படுகின்றது.

மேலும் இன்று சனிக்கிழமை காலை பால்ட்டிமோரில் அமுல் படுத்தப் பட்டிருந்த ஊரடங்கும் அமைதியான முறையில் நீடித்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக பால்ட்டிமோர் அதிகாரிகள் நகரின் மேலே ஹெலிகாப்டரில் பறந்தவாறு மெகாஃபோன் மூலம் ஆர்ப்பாட்டக் காரர்களை வீட்டுக்குச் செல்லுமாறும் இல்லாவிடின் கைதாவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஏற்கனவே வெள்ளி மாலை ஊரடங்கை மீறிய 15 பேர் உட்பட 53 பொது மக்களை போலிசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பால்ட்டிமோர் நகர மாநில சட்டத்தரணி மாரிலின் மொஸ்பை ஏப்பிரல் 12 ஆம் திகதி பலியான கிராய் விவகாரத்தில் 6 போலிஸ் அதிகாரிகள் சட்ட ரீதியாக விசாரிக்கப் படுவர் என உத்தரவாதம் தெரிவித்திருந்தார். 25 வயதுடைய கிராய் போலிஸ் கஸ்டடியில் சித்திரவதைக்குள்ளாகி போலிஸ் வேனில் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் படும் வழியில் கழுத்துப் பகுதியில் மோசமான காயத்தினால் பலியானதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஃப்ரெட்டியே க்ராய் வழக்கில் 6 பால்ட்டிமோர் போலிசார்கள் மீது சட்ட நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com