மாலை தீவில் கடந்த மாதம் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னால் அதிபர் மொஹமெட் நஷீட் ஐ விடுதலை செய்யக் கோரி அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிரணி அரசியல்வாதிகள் உட்பட பலர் கைது செய்யப் பட்டிருப்பதாக மாலை தீவு அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
நஷீட்டின் தண்டனைக் காலம் 13 வருடங்கள் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மாலைதீவு அரசு ஒரே இரவில் ஆர்ப்பாட்டப் பேரணி வன்முறையாக மாறியது எனவும் இதில் பல போலிசார் காயமடைந்ததை அடுத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்த நபர்கள் அனைவரும் ஒன்று கூடி அரசைக் கவிழ்த்து போலிசாரையும் எதிர் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் பட்சத்திலும் ஆர்ப்பாட்டத்தின் போது மொத்தம் எத்தனை பேர் கைது செய்யப் பட்டார்கள் என்ற விபரம் உத்தியோகபூர்வமாக வெளியிடப் படவில்லை.
எனினும் நஷீட் இன் மாலைதீவு ஜனநாயகக் கட்சியான MDP விடுத்த அறிவிப்பில் மார்ச் மாதம் தொட்டு இதுவரை ஆர்ப்பாட்டப் பேரணிகளில் குறைந்த பட்சம் 25 000 பேர் பங்குபற்றியதாகவும் சுமார் 170 பேர் வரை இதில் போலிசாரால் கைது செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டத்ததை ஒடுக்குவதற்காக போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டு மட்டுமன்றி பட்டொன், ஸ்டுன் கிரைனேட் போன்றவற்றாலும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. சுமார் 340 000 சுன்னி முஸ்லிம் சனத்தொகையைக் கொண்டுள்ள சிறிய நாடான மாலை தீவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் நஷீட் இன் கைதுக்கு ஐ.நா சபையும் சில மனித உரிமை அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாலைதீவு ஆர்ப்பாட்டத்தில் பலரைக் கைது செய்தது போலிஸ்