Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேபாளத்தை சற்று நேரத்திற்கு முன்னர் இன்று (மே 12 செய்வாக்கிழமை) மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தெரியவருகின்றது.  இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியுள்ளதாக இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டது

நேபாளத்தில் இன்று  முற்பகல்  கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சேதம் குறித்தத் தகவல்  இன்னமும் வெளியாகவில்லை. ரிக்டர்  அளவில் 7.1 ஆக நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,
ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து உருவான நில நடுக்கம் 4.1 அளவில் உணரப்பட்டு, இந்த நில நடுக்கம் டெல்லி, பீகார், மேற்குவங்கம்,ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சுமார் ஒரு நிமிடம் நில நடுக்கம் உணரப்பட்டதாகத்  தெரிய வருகிறது. கடந்த முறை நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போது, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.  மேலும் இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளைத் தாக்கிய நிலநடுக்கதினால் 8000 பேர் வரை இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேபாளத்தில் மீண்டும் பாரிய நில நடுக்கம் - ரிக்டர் அளவில் 7.4 என பதிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com