ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 7ம் திகதி ஆந்திர அதிரடிப்படை செம்மரம் கடத்தியவர்கள் என்று 20 தமிழர்கள் மீது எண் கவுண்டர் நடத்தியது.இதுத் தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு அதிகாரிகள் குழுவை நியமித்து இறந்தவர்களின் உறவினர்களிடம் மற்றும் சம்பவம் நடத்த இடத்தில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. இந்தக் குழு இன்று திரு அண்ணாமலைக்கு சென்று, உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
20 தமிழர்களில் 12 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள், மீதம் உள்ள 8 பேர் தருமபுரியை சேர்ந்தவர்கள் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை: மனித உரிமை ஆணையம்