அவுஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவுக்கு ஆப்புவைத்துள்ளது. நேற்றைய தினம்(12) அவுஸ்திரேலியா ஒரு வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் அலுவலகம் ஊடாக வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் அன் நாடு இந்தோனேசியாவுக்கு சுமார் 638 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கிவந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதனை 300 மில்லியன் டாலராக குறைத்துள்ளது. இது இந்தோனேசியாவுக்கு விழுந்துள்ள முதல் அடி ஆகும். ஆனால் மையூரன் மற்றும் அன்று சானை கொலைசெய்ததற்கு பழிவாங்க தாம் இவ்வாறு செய்யவில்லை என்ற அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆனாலும் இதுவரை காலமும் கொடுத்துவந்த இந்த உதவித்தொகையை ,திடீரென அவர்கள் குறைக்க என்ன காரணம் இருக்கிறது. அது அவுஸ்திரேலியா தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்திற்கு உதவ இருப்பதாகவும் , அதனால் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுக்கும் நிதியை குறைத்து அந்த தொகையை நேபாளத்திற்கு கொடுக்க இருப்பதாகவும் அவுஸ்திரேலியா சாட்டு சொல்லியுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் தான் நினைத்ததை அவுஸ்திரேலியா கால நேரம் பார்த்து அரங்கேற்றிவிட்டது.

0 Responses to அவுஸ்திரேலியா வைத்தது ஆப்பு: இந்தோனேசியா தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை