பங்களாதேஷில் இணையத் தள பிளாக்குகள் மூலம் சுதந்திரமாக மதச்சார்பற்ற வகையில் கட்டுரை எழுதி வந்த 32 வயதாகும் ஆனந்தா பிஜோய் டாஸ் என்ற எழுத்தாளர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்து அவர் வேலை செய்து வரும் வங்கிக்குச் சென்று கொண்டிருக்கையில் முகமூடி தரித்த 4 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.
இவரைத் தாக்கிக் கொலை செய்த கும்பல் தப்பி ஓடி விட்டதாகவும் இச்சம்பவம் காலை நேரத்தில் நடந்ததால் மிகக் குறைந்தளவு நபர்களே இதனை நேரில் பார்த்ததாகப் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பெப்ரவரி மாதம் பங்களாதேஷில் பிறந்த அமெரிக்க பிளாக்கரான அவிஜித் ராயும், மார்ச்சில் 27 வயதான வஷிக்குர் ரஹ்மானும் இதே முறையில் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வருடம் பங்களாதேஷில் கொல்லப் பட்ட 3 ஆவது இணையத் தள எழுத்தாளராக இன்று கொல்லப் பட்ட ஆனந்தா பிஜோய் டாஸ் விளங்குகின்றார். மேலும் ஆனந்தா பிஜோய் டாஸ் ஆங்கிலத்தில் 'சுதந்திர சிந்தனையாளர்கள்' (Free thinkers) எனப் பொருள்படும் 'முக்டோ மோனா' என்ற பிளாக்கரில் தனது மதச்சார்பற்ற கருத்துக்களைப் பகிர்ந்து வந்தவர் என்பதுடன் குறித்த பிளாக்கார் ஏற்கனவே கொல்லப் பட்ட எழுத்தாளர் அவிஜித் ராயினால் உருவாக்கப் பட்டதாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கும் அல்கொய்தா கிளையான AQIS இப் படுகொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.

0 Responses to பங்களாதேஷில் 3 ஆவது இணையத்தள எழுத்தாளர் படுகொலை