பிரதமருடன் தொடர்ந்து மோதலைக் கடைப்பிடித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமருடன் வங்க தேசம் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி எப்போதும் பாஜக ஆட்சியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து வருபவர். இந்நிலையில் மேற்குவங்கத்தை அடுத்து உள்ள நாடான வங்க தேசத்துக்கு அடுத்த மாதம் 6ம் திகதி பிரதமர் இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக அந்நாட்டுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகத் தெரிய வருகிறது.
மம்தா பானர்ஜியும் வங்க தேசத்துக்கு பிரதமருடன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். வங்க தேச அரசுடன் நல்லுறவு மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜியும் ஆலோசிக்க உள்ளார். மேலும், அகதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் நடத்துவார்கள் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to பிரதமருடன் வங்க தேசம் செல்கிறார் மம்தா பானர்ஜி