Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செம்மரம் கடத்தியவர்கள் என்று 74 தமிழர்களைக் கைது செய்துள்ளனர் ஆந்திர மாநிலம் கடப்பா போலீசார். கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி 20 தமிழர்களை செம்மரம் கடத்தியவர்கள் என்று ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று 74 தமிழர்களை செம்மரம் கடத்தினார்கள் என்று ஆந்திர மாநிலம் கடப்பா போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

விசாரணையில் இவர்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் திருமணத்துக்கு செல்கிறோம் என்று ஒரு குழுவாகக் கிளம்பி ஆந்திரா வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்குத் தலைவனாக செயல்ப்பட்டவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். செம்மரம் கடத்துபவர்கள் மீதான சட்டங்களைக் கடுமையாக்கி உள்ள ஆந்திர அரசு மிக கடுமையான தண்டனைகளை செம்மரம் கடத்துபவர்களுக்கு வழங்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

0 Responses to செம்மரம் கடத்தியவர்கள் என்று எழுபத்து நான்கு தமிழர்கள் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com