Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்களைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கடந்த 7 மாத காலத்துக்கு முன்னரே 449 கோடி ரூபாய் செலவில் சென்னை உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் காவலர் குடியிருப்புக்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படாமல் இருந்தன. 7 மாதத்துக்குப் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலைப் பெற்று முதல்வர் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதா, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் இவைகளை இன்று திறந்து வைத்தார்.

காவலர்களுக்கு என்று 64 சிறப்பு வாகனங்களையும் இன்று அவர் வழங்கினார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com