Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சற்று முன்னர் தமது போயஸ் கார்டன் இல்லத்தில், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை அன்று ஜெயலலிதா, சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து, நால்வரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருவது ஒரு புறம் இருந்தாலும், ஜெயலலிதா எப்போது முதல்வராகப் பதவி ஏற்பார் என்பதில் அதிமுக மவுனம் காத்து வருகிறது.இருப்பினும் சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவின் அறை சீரமைகக்ப்பட்டும் வருகிறது.

வருகிற ஞாயிறு அன்று ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொள்வார் என்று, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சற்று முன்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

0 Responses to ஜெயலலிதா, முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com