Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு விடுதலைக் குறித்து கர்நாடக சட்டத்துறையிடம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா ஒரு தீர்ப்பும், நீதிபதி குமாரசாமி ஒரு தீர்ப்பும் வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இருப்பினும், சொத்துக்கணக்கு குறித்து சரியாக தமது தீர்ப்பில் குமாரசாமி எடுத்து வைக்கவில்லை என்கிற விவரத்தை திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதற்கிடையில் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் அதிகாரம்,கர்நாடக அரசுக்கும், வழக்கைத் தொடுத்த சுப்ரமணிய சாமிக்கும் மட்டுமே உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து கர்நாடக சட்டத்துறையிடம் இதுக்குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவுப் பிறப்பித்து உள்ளதாகவும், இந்த ஆய்வுக்குப் பிறகே கர்நாடக அரசு ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதுக் குறித்து ஆலோசிக்கப்படும் என்று, சித்தாராமையா கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடக சட்டத்துறையிடம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு:சித்தாராமையா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com