இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் இணைந்திருப்பார்கள் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை காலை வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டார். அத்தோடு, சமய நிகழ்வுகள், புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஆகியவற்றிலும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் என்ற விடயத்தை குறிப்பிட்டார்.
அத்தோடு, இலங்கையுடனான உறவை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு திறைசேரி மற்றும் வர்த்தகத் துறைகளிலுள்ள அமெரிக்க அதிகாரிகளால் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜோன் கெரி கூறியுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நாட்டிற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒரு போதும் தயங்குவதில்லை எனவும், இவை 100 நாள் வேலைத்திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோன் கெரி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கும்: ஜோன் கெரி