Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் காணாமற்போனவர்களை அவர்களது உறவினர்கள் வெலிக்கடை, பூஸா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தேடுவதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்பிரகாரம், கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள பூஸா மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை தடுப்பு முகாம்களுக்கு உறவினர்கள் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

காணாமற்போனவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமைக்கான தெளிவான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், அந்த ஆதாரங்களைக் காட்டி, உறவினர்கள் அவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது ஓர் மனிதாபிமான அடிப்படையிலான பிரச்சினை என தெரிவித்த அவர், கணவன், பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமற்போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காணாமற்போனோரை வெலிக்கடை மற்றும் பூஸாவில் தேட விரைவில் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com