நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பந்துல குணவர்தன, ஜானக வக்கும்புர வீரகுமார திசாநாயக்க அடங்கலான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மதியம் குறித்த நம்பிகையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். இதில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் அடங்குவதாகவும் ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
0 Responses to ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!