Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடா ரொறன்ரோவில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூரும் நிகழ்வு மே 18 திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு Scarborough Town Centre அருகிலுள்ள Albert Campbell Square சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு பெருமளவு மக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தமிழகத்தின் தமிழின உணர்வாளர்களான கவிஞரும் பாடலாசிரியருமாகிய சிநேகன் மற்றும் இயக்குனர் கௌதமன் என பலரும் திரண்டு வந்து வணக்கம் செலுத்தினர்.

கனடா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் எம் இனத்தின் பேரிழப்பின் வலியை சுமந்து வாழும் தமிழினமாக ஒற்றுமையாக இந்த பெரும் நிகழ்வில் பங்கேற்று பேரெழுச்சி நிகழ்வாக வரலாற்றில் தடம் பதித்தது.

தமிழகத்தின் தமிழின உணர்வாளர்களான கவிஞரும் பாடலாசிரியருமாகிய சிநேகன், மற்றும் இயக்குனர் கௌதமன் என பலரும் எழுச்சியுரைகளையும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to ரொறன்ரோவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com